Tuesday, 22 December 2009

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில்
நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது
எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம்
தங்கி விட்டால் - இந்த
மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் -
வரும் ஜனனம் என்பது
வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில்
நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது
எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம்
தங்கி விட்டால் - இந்த
மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் -
வரும் ஜனனம் என்பது
வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.

Let the passions and bonds pass-by
Who has lived in this land forever?
Path of arrival is known - but
Path of departure and the route unknown.
If all who came opt to stay
Where's the space in this sphere?
Life is just a business -in which
the birth is credit and death is debit ...


கண்ணதாசன்

ஆயிரங்காலத்துப் பயிர் – நம்
தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார் !
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு !

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள் !

புற நானூறு

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."

பழஞ்சிறப்பை மீட்போம்

வான் புகழும் திருக்குறளை
உலகுக் கீந்து
வகைமலிந்த கலைபலவும் வளர்த்த தாயாம்

தேன்வடியும் தமிழ் மொழியின்
திறத்தைப் போற்றி
தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போம்



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
.............திருக்குறள்



தமிழன் இல்லாத நாடில்லை ஆனால்

அவனுக்கு தனி நாடில்லை

...........ஈழத்தின் குரல்

தமிழ்த்தாய் வணக்கம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வான மளந்தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம அறிந்தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே


தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும்

தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே !!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!