Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts
Showing posts with label தமிழ்த்தாய் வாழ்த்து. Show all posts

Tuesday, 22 December 2009

தமிழ்த்தாய் வணக்கம்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வான மளந்தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம அறிந்தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே


தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும்

தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே !!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!
வாழ்த்துதுமே !!!