தஞ்சை பெரிய கோயிலை - என்னுடன் சுற்றினான் ஒரு வெள்ளையன் அவன் எந்நாடு என்று நானறியா - இருந்தும் என்னாட்டுக் கலை கண்டு வாய்ப்பிளந்த போது எனக்குள் ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ... வானுயர்ந்த கோபுரம் போல் என்னாடே உயர்ந்தது என்று தலைநிமிர்ந்து திரும்பினேன் ... கோயில் தலைவாசலில் - அந்த அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம் இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ... சற்று முன் தலைக்கேறிய தலைக்கணத்தில் தலைக் கவிழ்ந்து நடந்தேன் ... ஒர் ஏழை தமிழனாக ...!!! NMUT98FS54NW | ![]() |
தமிழ் கவிதைகள்
...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!
Tuesday, 22 December 2009
ஒர் ஏழை தமிழனாக
தமிழ் வளர்ப்பாயாக
தாய்மொழி தமிழ் ஆங்கிலம் பாடும் அன்பு மழலை கேட்டு இரசிக்கும் பெற்றோர் கூட்டம் தாங்கி வந்த தாய்மொழியில் தோண்டி வளர்க்கும் அரளிச் செடி மரமாகி மாய்க்கும் முன்னரே வெட்டறுத்து தூவுவாயாக தமிழ் விதையை. சங்கம் வளர்க்க வேண்டாம் மழலையில் தமிழ் வளர்ப்பாயாக | ![]() |
நீ தமிழே !
நீ தமிழே ! நீ தமிழே ! இதை விளக்கும் என் தமிழே உன்னால் என்னுயிர் வாழும் என்னுயிர் நீ ! ஆதலால் என் மெய்யும் வாழும் உயிர், மெய் வாழத் தேவை தமிழே ! என் உயிர், மெய் வாழத் தேவை நீ தமிழே !! | ![]() |
மேடைப் பேச்சு
மேடைப் பேச்சு என்பது காலட்சேபமுமல்ல. வசன சங்கீதமும் அல்ல. இனிமைச் சுவையை எல்லோருக்கும் அளிக்கும் நா வாணிபமும் அல்ல. கைகட்டி கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமுமல்ல. உயிர்ப் பிரச்சினைகளைப் ப ற்றியக் கருத்துக்களை வெளியிடும் களம், மேடை. | ![]() |
பாரதி
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.. கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) | ![]() |
கடைசி வரை யாரோ
NMUT98FS54NWவீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? The kin, till the house, The wife, till the street, The son, upto the cemetery, Who will come beyond that? | ![]() |
யாருமுண்டோ
ஆடை இன்றி பிறந்தோமே - ஆசை இன்றி பிறந்தோமா? ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ? Though born without a dress, did we come without passions? when we complete the merriment can anyone carry their possessions? | ![]() |
Subscribe to:
Posts (Atom)